Breaking News

எறும்பு - அறிவியல் 

எறும்பு சுறுசுறுப்புக்கு பெயர் பெற்றது. 
சிறுக சிறுக சேமித்து வைக்கும் பழக்கத்தை எறும்பிடம் 
இருந்து கற்று கொள்ள வேண்டும் என்பர். 

மேலும் அணிவகுப்பிற்கும் உதாரணமாக எறும்பை சொல்வர். 
இப்படி எறும்புகள் தொடர்ந்து செல்வதற்கு காரணம் என்ன 
என்று நாம் தெரிந்து கொள்ளலாமா குட்டீஸ்! 

பலர் எறும்புக்கு கண் தெரியாது என்பர். இதில் ஓரளவு உண்மை 
இருக்கிறது. எப்படியென்றால், "ஓம்மடீரியா' என்ற சிறு கண் 
போன்ற கூட்டுறுப்புகள் பல கொண்டுள்ள எறும்புக்கு கண்ணின் 
பார்வை மிக மங்கல்தான். 

பின், இவை எப்படி ஒன்றன்பின் ஒன்றாக செல்கிறது. 
"ப்யூரமோன்' என்றும் "ப்யூமரிக் அமிலம்' என்றும் சில ரசாயனப் 
பொருட்கள் எறும்பின் உடலிலிருந்து வெளிப்படும். 

எனவே, ஒரு எறும்பு செல்லும் போது அவற்றில் இருந்து 
வெளிவரும் இந்த ரசாயனத்தின் மணத்தை வைத்து மற்றொரு 
எறும்பு பின் செல்கிறது. இது அறிவியல் கூறும் உண்மை. 
-
-----------------------------------
சிறுவர் மலர்

No comments