Breaking News

சிந்திக்க வைத்த கருத்துகள் -படித்ததில் பிடித்தது

சாரி கேட்பதால் நாம் ஒன்றும் ஆங்கில மேதைகள் என்று யாரும் எண்ணிக்கொள்ள மாட்டார்கள். மன்னிப்புக் கேட்பதால் நாம் ஒன்றும் ஆங்கிலம் தெரியதவர்களாகிவிட மாட்டோம். 


ஒரு முறை அறிஞர் 
அண்ணா அவர்கள் தொடர்வண்டியில் பயணம் செய்தார், அவரின் அருகில் வெளிநாட்டினர் இருவர் அமர்ந்திருந்தனர். அண்ணாவின் 
தோற்றத்தைப் பார்த்த வெளிநாட்டவரில் ஒருவர், அண்ணாவின் காலை 
வேண்டுமென்றே மிதித்துவிட்டு சாரி என்றார். அமைதியாக  இருந்தார் அண்ணா. மீண்டும் காலினை மிதித்துவிட்டு சாரி என்றதும், 
I am not a lorry carry your sorry,   
என  ஆங்கிலத்தில் அடுக்குமொழி பேசி அவர்களை அதிர  வைத்தார் அண்ணா. 

தவறு என்பது தவறி செய்வது!
தப்பு என்பது அறிந்தே செய்வது!
நாம் செய்த தவறுக்காக,ஏன் தெரிந்தே தப்பு செய்யவேண்டும்!
மன்னிப்பு என்ற வார்தைக்கு சாரி என்ற வார்த்தை என்றும் சமமனாதல்ல!

//ஒருவரைப் புண்படுத்தும் போது எது பற்றியும் யோசிக்காமல் க்ஷணப்பொழுதில் செய்து விடுகிறோம்.  ஆனால் மன்னிப்புக் கேட்கும் போது மட்டும் அதைச் செய்யாமல், காலம் சரி செய்து விடும் என்று காலத்தின் மேல் பழி போட்டு விடுகிறோம்.  அதையே நானும் செய்திருக்கிறேன்.
மன்னிப்பு என்றாலே இனி இப்படி நடக்காது என்று தான் பொருள். //-சாரு  நிவேதிதா- 




மூன்று வயதில் பேசக் கற்றுக்கொள்கிறோம்! 
ஆனால் வாழ்நாள் முழுக்க எப்படிப் பேசுவது 
என்பதை நாம் கற்றுக்கொள்வதில்லை! 
பிற மொழிகளில் மட்டுமல்ல! 
தாய்மொழியிலும் தான் !
…………………


எந்த வார்த்தை பேச வேண்டும் என்று அறிந்து பேசுபவரை விட,
எந்த வார்த்தையைப் பேசக் கூடாது என்பதை உணர்ந்து பேசுபவரே சிறந்த பேச்சாளர்.

மகிழ்ச்சியும் ஆனந்தமும் ஒன்றல்ல.மகிழ்ச்சி வெளியில் இருந்து வருவது,ஆனந்தம் உள்ளிருந்து வருவது.

No comments