Breaking News

கல்வியில் புதுமை - பின்லாந்து



உலக நாடுகளில் பின்லாந்து, கல்வியில் பல்வேறு புதுமைகளை செய்யும் முன்னணி நாடாக விளங்கி வருகிறது. ஏனெனில் அங்கு ஏற்கனவே வீட்டுப்பாடம் எழுத வேண்டிய நிர்ப்பந்தம் கிடையாது. அடிக்கடி தேர்வு நடத்தும் முறையும் கிடையாது. அத்துடன் ஒரு மணி நேர பாட வகுப்பிற்கு பிறகு 15 நிமிடம் இடைவெளி பின்பற்றப்படுகிறது. மற்ற நாடுகளைவிட பள்ளி வேலை நாட்களும் குறைவுதான்.

இந்தத் திட்டங்களை அறியும்போது ‘நாமளும் பின்லாந்தில் படிக்கக் கூடாதா’ என்று நம் நாட்டு மாணவர்களை ஏங்க வைக்கலாம்! தற்போது அந்த நாடு மேலும் ஒரு புதுமையான திட்டத்தை அமல்படுத்தி உள்ளது.

அது என்னவென்றால் எல்லா மாணவரும் எல்லா பாடங்களையும் படிக்க வேண்டிய அவசியம் இல்லை. அதாவது சமூகவியல் நாட்டம் கொண்ட ஒரு மாணவர், ஆங்கிலம் படிக்கவோ, அறிவியல் கற்றுக்கொள்ளவோ அவசியம் இல்லை. அதற்காக நேரம் செலவிடவும், மதிப்பெண் குறைந்து வருத்தப்படவும் தேவையில்லை.

‘இப்படி குறிப்பிட்ட விஷயங்களை கற்றுக்கொள்ள மட்டுமே ஒரு மாணவர் தனது நேரத்தை செலவிடும்போது அந்தத் துறையில் நிறைய விஷயங்களை அறிந்து கொண்டு உயர்ந்த நிலையை அடைய முடியும்’ என்று அங்குள்ள கல்வித் துறை நிபுணர்கள் கூறுகிறார்கள். இதற்கான சட்ட திட்டங்களும் வகுக்கப்பட்டு உள்ளன. அதே வேளையில் ‘மாணவர்கள் மற்ற துறை சார்ந்த அறிவு பெறாதவர்களாக போய்விடுவார்கள்’ என்ற எதிர்ப்பும் கிளம்பி இருக்கிறது.

No comments