Breaking News

கல்வியை வினைத்திறனாக்குவதில் ஆசிரியரது பங்கு



கல்வியானது மனிதவள மேம்பாட்டிற்கும் மனித வாழ்க்கை முன்னேற்றத்திற்கும் உறுதுணையாக அமைகின்றது. கல்வியில் ஏற்படும் முன்னேற்றமானது ஒரு நாட்டின் அபிவிருத்தியில் முக்கிய பங்கு வகிக்கின்றது. ஒரு நாட்டின் எதிர்காலம் அந்நாட்டின் சிறுவர்களுக்கு அளிக்கப்படும் கல்வியிலேயே தங்கியுள்ளது. அறிவீனத்தை அழித்து
தனிமனிதர்களை அறிவாழியாக்கும் செயற்பாடே கற்பித்தலாகும். கற்பிப்பவர், கற்பவர், கற்றல் என்பன முறையான கல்வியின் மூன்று முக்கிய அம்சங்கள் என்பதை நாம் அறிவோம். இது ஒரு முக்கோணத்தின் மூன்று அடித்தளங்கள் போன்றதாகும். ஆசிரியர், மாணவர்,கலைத்திட்டம் என்ற மூன்றையும் வேறுபடுத்திக் காட்டுவது கடினம் எனினும் மாணவர்
கற்கையில் ஆசிரியருக்கும் கலைத் திட்டத்திற்கும் இடையே உள்ள முக்கியத்துவத்தை இந்த தொகுப்பானது எடுத்துக்காட்ட முனைகின்றது.

தற்காலக் கல்வி எண்ணக்கருக்களுக்கு ஏற்ப மாணவர் என்பவர் கற்பவர் அல்லது கற்றலில் ஈடுபடுபவர் ஆவார். ஆசிரியர் என்பவர் கற்பிப்பவர் என்பதை விட கற்க வழிகாட்டுபவர் எனலாம். கலைத்திட்டம் என்பது கற்பித்தலுக்கும் கற்றலுக்கும் மூலமாக அமைவதாகும். ஆகவே ஆசிரியரைப் போல் மாணவரும் கலைத் திட்டததைப் பயன்படுத்துகின்றான். தேவையேற்  படும் போது அதனை உபயோகித்து கொள்கின்றான்  கலைத்திட்டம் என்பது நிரந்தரமான ஒன்றல்ல.காலத்துக்குக் காலம் சமூகத்துக்குச் சமூகம்,
வகுப்புக்கு வகுப்பு வேறுபடும் தன்மையானது. ஆவ்வாறே கலைத்திட்டம் பொதுவானது. தானே தோற்றம் பெற்றதொன்றல்ல அது சில தனியாட்கள் உதவியுடன் தேவைக்காக உருவாக்கப்பட்டது. ஆகவே தேவையான போது அதில் மாற்றங்களைச் செய்து கொள்ளலாம்.

கலைத்திட்டத்தை ஒழுங்குபடுத்துவதில் அநேகர் பங்கு கொள்வர். வளர்ச்சியடைந்த நாடுகளின் கல்வி தொடர்பான நிபுணர்கள் பங்கு கொள்வது நல்லது என்பது சில கல்வியியலாளர்களின் கருத்தாகும். மாணவர்கள், பெற்றோர், கல்வி நிபுணர்கள், கொள்கை வகுப்போர் ஆகியோர் இதிலடங்குவர். கலைத்திட்டத்தில் பாடசாலைக் கல்வி முறையின்
பயன் தங்கியுள்ளது. ஆகவே பாடத்தை ஒழுங்குபடுத்துவதற்கும் மாற்றியமைப்பதற்கும் அதில் அனுபவமும்  அறிவும்  முயற் சியும் உள்ளவர்களே பங்கு கொள்ளல் வேண்டும்.

 உலகில் காணப்படும் அனைத்து தொழில்களிலும் மேலான தெய்வகத்  தன்மை வாய்ந்த ஒரு தொழிலாக ஆசிரியர் தொழில் காணப்படுகின்றது. மற்றைய தொழில் துறையினரைக் காட்டிலும்  அதிகமான பொறுப்பும் முக்கியத்துவமும் வாய்ந்தவர்களாக ஆனால் ஒரு நல்ல ஆசான் அந்த உலகையே குழந்தைக்கு வழங்குபவர்களாக காணப்படுகின்றனர். 'நான் உயிருடன் இருப்பதற்கு என் தந்தைக்குக் கடமைப்  பட்டிருக்கிறேன். ஆனால் சிறப்பாக வாழ்வதற்கு என் ஆசிரியருக்கு கடமைப் பட்டிருக்கிறேன்.' என்னும் அலெக்சாண்டரின்  கருத்தும் அதனையே பறைசாற்றுகின்றது.

ஒரு பிள்ளை பிறந்ததில் இருந்து ஐந்து அல்லது ஆறு வயது வரைக்கும் பெற்றோரின் வழிகாட்டலில் வளர்கின்றனர். அதற்கு அடுத்ததாக பாடசாலைக் கல்வி தொடக்கம் உயர் கல்வி வரைக்கும் அப் பிள்ளையை வழி நடாத்தும் ஒரு நபராக இவ் ஆசிரியர்   விளங்குகின்றார். இங்கு பாடசாலைக் காலத்திலேயே பெரும்பாலும் இவர்களின் பங்கானது சிறப்பானதாகக் காணப்படுகின்றது. இன்றைய நிலையில் பெற்றோர்களின் அன்பானது பெரும்
பாலான பிள்ளைகளுக்குக் கிடைப்பதில்லை. காரணம்  இன்றைய நவீன உலகில் பெற்றோர்கள் தொழிலுக்கு முக்கியத்துவம் அளித்து ஓடி ஓடி உழைக்கின்றனர். அதனால் அவர்கள் பிள்ளைகளைக் கவனிப்பதும் அவர்கள் மீது அன்பு காட்டுவதுமில்லை. அதனால் பிள்ளைகள் அவர்களுக்கு அடுத்து அன்பினைச் செலுத்தும் ஆசிரியர்களால்  கவரப்படுகின்றனர் உயர் கல்வியைப் பொறுத்த வரையில் இதன் தன்மை மிகக் குறைந்த
பட்சமே காணக்கூடியதாக உள்ளது. ஒரு சிற்பி ஒரு வடிவில்லாத கல்லைச் செதுக்கி  உருவம் கொடுக்கின்றானோ அதே போல் ஒவ்வொரு பிள்ளையும் சிறந்த ஒழுக்கமுடைய அறிவு மிக்க பிள்ளைகளாக மாற்றும் ஒருவராக ஆசிரியர் காணப்படுகன்றார்.

பாடசாலையில் கற்றலுக்கும் கற்பித்தலுக்கும் கலைத் திட்டம் அடிப்படையாக அமையும். கலைத்திட்டத்தைப் பயன்படுததுபவர் ஆசிரியரே கலைத திட்டத்தைத் தயாரிப்பவர் யார்? அது ஒரு தனியாளின் செயல் அல்ல. பெரும்பாலும் கலைத் திட்டஅபிவிருத்திக் குழுக்கள் பற்றிக் கேள்விப்பட்டிருக்கின்றம்  கலைத் திட்ட குழுக்களில் பங்கு
கொள்வோரில் ஆசிரியர் முக்கிய இடம் பெறுவார். பிற  அறிவு மட்டுமன்றி கற்பித்தல் அனுபவம், மாணவர் உணர்வுகள் என்பவற்றை அறிந்துள்ள ஆசிரியரால் கலைத் திட்டத்தினை தயாரிக்கும் போது, பெரும் பங்களிப்புச் செய்ய முடியும். ஒவ்வொரு மாணவர் குழுக்கழுக்கும் தேவையான அளவு அறிவின் தள.ம்  கற்கும் திறமை என்பன பற்றி உள்ளஅனுபவம், அறிவு, பயிற்சி என்பவற்றிற்கு ஏற்ப கலைத் திட்டத் தயாரிப்பில் பங்கு கொள்ளலாம். கலைத் திட்டத் தயாரிப்பில் நிபுணத்துவ அறிவு மட்டும் போதாது. அதன் நடைமுறை அனுபவம் பெற் றிருப்பவர் ஆசிரியரே!ஆகவே கலைத்திட்டத் தயாரிப்பில் ஆசிரியரின் பங்கு அளப் பெரியது.

 கலைத் திட்டத்தினை நடை முறைப் படுத்துவதிலும் பிரதான (தலைமை) பங்கு வகிப்பது ஆசிரியராவார். கலைத் திட்டம் தொடர்பாக மாணவர்களினதும், பெற்றோர்களினதும் ஒத்துழைப்பைப் பெற்று நடைமுறைப் படுத்துவதில் ஆசிரியர் தானாகவே தலைமையைப் பெறுகின்றார். பாடசாலை அதிபரைத் தவிர இத் தலைமை பெற ஆசிரியரைப் போல் வேறொருவரில்லை. அதே போல் கலைத் திட்டத் தயாரிப்பாளர்களின் வழி முறைக்கேற்ப ஆசிரியர் நடந்து கொள்ளவும் வேண்டும் தலைமைத் துவமும்  பின்பற்றலும் ஒரு செயற்பாட்டின் இரு துருவங்களாகும். கலைத்திட்டத்தினை முறைப்படி பயன்படுத்திக்கொள்ளவும் ஏனையோரைக் கலைத் திட்டத்தை நோக்கி நோக்கி திசை திருப்பவும்  முன்னின்று
கருமமாற்ற வேண்டியவர் ஆசிரியரே.

கலைத் திட்டம் ஒன்று திட்டமிட்ட மாத்திரத்தில் அல்ல தயாரித்த மாத் திரத்தில்அதனை வெற்றிகரமாக நடைமுறைப் படுத்தலாம் என கூற முடியாது. கலைத் திட்டம் வகுப்பறைக்  கற்றல் கற்பித்தலில் நடைமுறைப் படுத்துவதற்கு முகாமைத்துவ திறமைகள் தேவைப் படுகின்றது. இதற்கான காலம், இடவசதி, மாணவர் தொகை, மாணவர் கற்கும் வகுப்பு, கற்ப்பித்தல் முறை என்பன கவனத்திற் கொண்ட பாடத்திட முகாமைத்துவம்ஆசிரியரிடம் ஒப்படைக்கப்படுகின்றது. இதற்க்குப் பாட நிபுணத்துவ ஆசிரியர் தம் பங்களிப்புதொடர்பாக பொறுப்புடையவராவர்.

கலைத் திட்டம் தொடர்பாக நடைமுறை அனுபவம் ஆசிரியருக்கே உண்டு என்பதை அறிவோம். நடை முறை அனுபவமுள்ள ஆசிரியர் கலைத் திட்டத்  தயாரிப்புப் போன்றே பாடத்திட்ட மாற்றத்திலும் முக்கிய பங்கு கொள்வர். இங்கு கலைத் திட்ட மாற்றம் எந்நிலைகளில் ஏற ;படும் என்பதைக் கவனிக்கலாம். கல்வி நோக்கங்களை மாற்ற வேண்டியதேவை ஏற்படும். மேலும் பாடத்திட்ட உள்ளடக்கம் அல்லது முறைகள் போதுமானதாக இல்லாவிடின் கலைத ;திட்டத் தில் மாற்றங்கள் செய்ய நேரிடும். சில வேளை ஒருசமூகத்தில் அரசியல் ரீதியான கொள்கை மாற்றங ;கள் ஏற்படும் போதும் கலைத்திட்ட மாற்றங்கள் செய்ய வேண்டி ஏற்படும். இலங்கையில் ஆட்சியாளர்கள் மாறும் போதும் இத்தகைய மாற்றங்கள்ஏற்பட்டுள்ளன.

வேறு சில வேளை ஏதாவது ஒரு பாடத்துறை நாட்டுக்கு அல்லது சமூகத்துக்கு
பொருத்தமற்றதாகவோ தற்கால சமூக அமைப்பிற்க்குப்  பொருத்தமற்றதாகவோ இருக்குமிடத்துகலைத்திட்ட மாற்றம்   செய்ய வேண்டி ஏற்படும். மாணவர் சார்பாகப் பார்க்கும் போது அவர்களது தகமைக்கு கலைத்திட்ட அளவு கூடிக் குறைந்து இருக்கும் போது மாற்றங்கள் செய்ய வேண்டிவரும். புதிய பாடத்திட்டஙகள் பரீட்சாத் திகரமாகப் புகுத்தும் போதும்கலைத்திட்ட மாற்றங்கள் செய்யப்படும். உதாரணம் புதிய கணிதம், சமூக அறிவியல், சுற்றாடல் தொழிற்பாடுகள் ஆகிய பாடத் துறைகள் இலங்கையில் சமர்ப்பித்த சந்தர்ப்பங்களைக் கவனத்தில் கொள்ளலாம். இத்தகைய கலைத்திட்ட மாற்றங்கள் எந்நிலையில் நிகழந்த போதும் அவை அவசரமாக நடைமுறைப் படுத்தப்பட மாட்டாது. அதற்காகப் போதிய காலம் ஒதுக்குதல் வேண்டும். நடைமுறையில் உள்ள கலைத் திட்டம் பற்றி அறியவும் மற்றம் செய்ய வேண்டிய மாற்றங்களைத் தீர்மானிக்கவும் மாற்றம் செய்யப்பட்ட கலைத் திட்டங்களைப் பரீட்சாத்தமாகச் செய்து பார்க்கவும்  காலம் தேவைப்படும்.

நடைமுறையில் உள்ள கலைத்திட்டம் பற்றி நன்கு கற்றுக்கொள்ள ஆய்வாளரான ஆசிரியருக்கு முக்கிய இடம் உண்டு. பாடத்திட்டம் தொடர்பாக நடைமுறை அனுபவம் உள்ள ஆசிரியர் நடைமுறைப்படுத்த வேண்டிய அம்சங்கள், மாற்றம்  செய்ய வேண்டிய அம்சங்கள், அதில் எழும் பிரச்சினைகள் என்பன பற்றி நல்ல அறிவு உள்ளவராக இருப்பார். பாட
நிபுணர்கள் முன் இவ் விடையங்களைச் சமர்ப்பிக்க ஆசிரியருக்கு முடியும். கலைத்திட்ட மாற்றம் தொடர்பான தேவைகள் பற்றிய நல்லறிவுள்ள ஆசிரியர் ஒரு தலைவராக, மாற்றங்கள் தொடர்பான ஆலோசனைகளை வழங்குதல், அவை ஏற்றவை என நிரூபிக்க காரணங்களை எடுத்துக்காட்டி, உறுதிப்படுத்தல்  ஆகிய கருமங்கள் ஆசிரியருடையது. கலைத்திட்ட
மாற்றங்கள் தொடர்பான வரைவிலக்கணம்  கூறுபவராக ஆசிரியரை அறிமுகப்படுத்தலாம். மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் தெளிவாகும் முறையில் விளக்கக் கூடியவர் ஆசிரியரே.

அவராலேயே கலைத்திட்டத்தைப் பொருளுடையதாக்க முடியும். வகுப்பறையில் பயன்படுத்தும் முறைகளுக்கு ஏற்ப அதன் பொருளும்  மாறும். கலைத்திட்ட மாற்றம் தொடர்பான நிருவாகியும்
அவரே. ஊணமையில் மாற்றிய கலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துபவர் ஆசிரியராவார். ஆத்துடன் மாற்றப்பட்ட கலைத்திட்டம் ஒன்றை மதிப்பீடு செய்தல் அவசியமாகும். இம்மதிப்பீட்டில் ஆசிரியர் முக்கிய பங்கு கொள்கிறார். கலைத்திட்டம் பரீட்சார்த்த கரமான நிலையிலும் உண்மையில் நடைமுறைப்படுத்தும் நிலையிலும் மதிப்பீடுகளை மேற்கொள்ளலாம்.

பாடத்திட்ட மாற்றதிற்கு முன்னும் பின்னும் இருந்த நிலை பற ;றி ஆசிரியர் அறிந்து வைத்திருப்பதனால் கலைத் திட்ட மாற்றங்களை மதிப்பீடு செய்வதில் ஆசிரியர் பங்கு முக்கியமானது. கலைத் திட்டத்தை மாற்றுவதில் ஆசிரியர் பங்கு மகத்தானது.மாணவர்களினதும், பெற்றோர்களினதும் உள நிலை என்பன பற்றி நன்கு விளங்கிக்  கொள்ளும் சந்தர்ப்பங்கள் அவருக்கு இருப்பதனாலும் மாணவர் தரம், பிரச்சினைக்குரிய இடங்கள், பொருத்தமற்ற இடங்கள் என்பன நன்கு அறிபவர் ஆசிரியர் என்பதனாலும்  கற்றல் செயல் முறையிலும், கலைத்திட்ட வளர்ச்சியிலும் ஆசிரியர் பங்கு அளப்பெரியதே!

மனிதனின் அனுபவங்கள், தொழிநுட்ப மாற்றங்கள், கற்றல் கற்பித்தல் பற்றிய
உளவியல் ஆராய்ச்சி புதிய கல்விதத்துவங்கள் என்பவற்றின் அடிப்படையில் பல்வேறு நாடுகளினதும் கலைத்திட்டங்கள் சென்ற தசாப்தத்தில் பழைய பாடங்களுக்குப் பதிலாக மாற்றமடைந்து வருகின்ற தொழிநுட்ப உலகிற்குப் பொருத்தமான பாடங்கள் கலைத்திட்டத்தில் சேர்க்கப்பட்டன. இதனால் இன்று பெரும்பாலான நாடுகளின் கலைத்திட்டம் என்பன புத்தகங்கள், வகுப்புச் சுவர்கள் என்பவற்றிற்குப் மாத்திரம் மட்டுப்படுத்தப்படாது
ஆயவுகூடங்கள், தொழிற்சாலைகள், சமூகம் என்பவற்றையும் கொண்ட விரிவானநோக்கங்களை உடையதாயுள்ளது.

மாறுகின்ற உலகிற்கும் சமூகத்திற்கும் பொருத்தமான வகையில் கலைத்திட்டத்தில் மாற்றங்கள் இடம் பெறுவதனையே இன்றைய நவீன சமூகம் எதிர்பார்க்கின்றது‟. அத்துடன் மாணவர் கற்கையில் கலைத்திட்டங்கள் முதன்மையானவையாக விளங்குவதனால் இதில் ஆசிரியர் பங்கு அளப்பெரியதாகக் காணப்படுகின்றது. எனவே கலைத்திட்டமானது புத்தகத்தின் சாயலாக அமையாமல் நடைமுறை வாழ்க்கைக்கு ஏற்றதாக அமைய வேண்டும்  இத்தகைய சாயலை நிஐப்படுத்துபவராக ஆசிரியர் காணப்படுகிறார். இதனால் மாணவர்களின் வினைத்திறமான கற்க்கை முறைக்கு ஆசிரியரதும், கலைத்திட்டத்தினதும் பங்கு இன்றியமையாததாகும்.

கோ. ஊசாந்தினி
கல்வி பிள்ளை நலத்துறை
கல்வியியல் சிறப்புக் கற்கை
கிழக்குப்பல்கலைக்கழகம் .

No comments