Breaking News

HUAWEI அறிமுகப்படுத்தும் NOVA 4 - உலகின் முதலாவது punch screen தொழில்நுட்ப தொலைபேசி இலங்கையில்



இலங்கையிலுள்ள ஸ்மார்ட்போன் பாவனையாளர்களுக்கு உலகின் முதலாவது punch screen தொழில்நுட்ப தொலைபேசியை அறிமுகப்படுத்தும் HUAWEI நிறுவனம், HUAWEI NOVA 4 என்ற புரட்சிகரமான புதிய சாதனத்தை அண்மையில் அறிமுகப்படுத்தி வைத்துள்ளது. இத்துளை வடிவிலான (punch hole-style) முகத்திரையானது அதன் அளவு தேவையை (notch) அகற்றி, இந்த சிறப்பம்சத்தின் மூலமாக, தனது பாவனையாளர்களுக்கு அதிகபட்ச ´முகத்திரை அனுபவத்தை´ வழங்கும் செயற்பாட்டை HUAWEI நிச்சயமாக ஆரம்பித்துள்ளது என்றே கூற வேண்டும். 

பின்புற முக்கேமராக்களுடன், 91.8% என்ற உடற்பாக வீதமானது, முதலாவது punch screen display கொண்ட சாதனம் என்ற பெருமையை இந்த உயர் ரக வடிவமைப்பிற்கு சேர்ப்பித்துள்ளது. பாரிய 6.4 அங்குல IPS LCD panel மற்றும் edge-to-edge (முழுமையான) display இனை NOVA 4 இல் HUAWEI உபயோகித்துள்ளதுடன், NOVA 4 இன் பின்புறமானது சாய்வு (gradient) நிறத்திலான வடிவமைப்பினைக் கொண்டுள்ளது. எவ்விதமான குறைவுமின்றி இந்த அழகியல் நயங்களுடன் விரல் அடையாள சென்சார் (finger print sensor version 4.0) இனையும் கொண்டுள்ளது. 

பின்புற முக்கேமரா, அதி விசாலமான கோணம் (Ultra wide angle), Super Night mode, AI Video மற்றும் 25MP Selfie Superstar கொண்ட முன்பக்க கேமரா ஆகிய தொழில்நுட்ப சிறப்பம்சங்களுடன், Huawei NOVA 4 இன் புகைப்படவியல் சிறப்பானது பாவனையாளர்களுக்கு மற்றுமொரு முக்கியமான வாய்ப்பாக அமைந்துள்ளது. 117 பாகை கோணம் வரை நீட்டிக்கப்பட்டு, புகைப்படத்தை வசப்படுத்த இடமளிக்கின்ற ஒரு மறுசீரமைக்கப்பட்ட ஸ்மார்ட் புகைப்படவியல் சாதனமாக, 20MP+16MP+2MP பின்புற முக்கேமராக்களைக் கொண்டுள்ளதுடன், தனது அதி விசால கோணத்தின் மீது HUAWEI கவனம் செலுத்தியுள்ளது. 

Kirin 970 Chipset, 8GB RAM மற்றும் தாராளமான தேக்கக வசதி கொண்ட 128GB ஆகியவற்றுடன் இச்சாதனத்தின் செயல்திறன் மேலும் மேம்படுத்தப்பட்டுள்ளது. அதிநவீன இயங்கு தள வடிவமான (operating system), EMUI 9.0 ஆனது NOVA 4 சாதனத்தின் செயல்திறனை கணிசமான வழிகளில் மேம்படுத்துவதுடன், AI stabilizer, HDR Pro, individual spotlight reel உடனான AI video recording, பிரத்தியேகமான அழைப்பவர் அடையாளம் (customized caller ID) மற்றும் live call image beautification ஆகிய தொழில்நுட்ப சிறப்பம்சங்கள் அதில் உள்ளடங்கியுள்ளன. தொலைபேசியை மிக இலகுவாக ஸ்கேன் செய்யும் முறைமையுடன் HUAWEI இன் அதிநவீன செயற்கை புலனாய்வு (AI) தொழில்நுட்ப அம்சங்களை அறிமுகப்படுத்துவதுடன், NOVA 4 இன் HiVision ஆனது AI Shopping, AI Calories மற்றும் பல அடங்கலாக, காட்சி மற்றும் பொருள் அடையாளத்துடன் பன்முக AI அனுபவத்தை வழங்க அதனால் முடிகின்றது. அதியுச்ச gaming அனுபவத்திற்கு 2.0 GPU Turbo acceleration இன் பக்கபலத்தையும் இச்சாதனம் கொண்டுள்ளதுடன், 3,750mAh battery with 18W வேகமான மின்னேற்ற தொழிற்பாட்டுடன் 3,750mAh battery இனையும் NOVA 4 கொண்டுள்ளது. 

HUAWEI NOVA 4 ஆனது இலங்கையிலுள்ள பாவனையாளர்களுக்கு கறுப்பு மற்றும் நீல சாய்வு நிறங்களில் கிடைக்கவுள்ளது. ஒரு வருட கால உத்தரவாதத்துடன் கிடைக்கப்பெறுகின்ற இச்சாதனம், அனைத்து HUAWEI அனுபவ மையங்கள் மூலமாகவும் கிடைக்கப்பெறுவதுடன், இலங்கையில் ஸ்மார்ட்போன்களை சந்தைப்படுத்துவதில் முன்னிலை வகித்து வருகின்ற சிங்கர் நிறுவனம், HUAWEI NOVA 4 சாதனங்கள் நாடளாவியரீதியில் எங்கும் கிடைப்பதை உறுதி செய்யும். தெரிவு செய்யப்பட்ட டயலொக் மற்றும் மொபிடெல் காட்சியறைகளிலும் இப்புதிய சாதனம் கிடைக்கப்பெறும். 

GfK அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையின் பிரகாரம் இலங்கையில், ஸ்மார்ட்போன் விற்பனையில் HUAWEI முதலாவது ஸ்தானத்தை வெற்றிகரமாக தனதாக்கியுள்ளது. 2018 ஆம் ஆண்டில் BrandZ இன் முதல் 100 இடங்களில் திகழும் மிகவும் பெறுமதிவாய்ந்த சர்வதேச வர்த்தகநாமங்கள் பட்டியலில் இந்த வர்த்தகநாமம் 48 ஆவது இடத்தைப் பிடித்துள்ளதுடன், Forbes வெளியிட்டுள்ள உலகின் மிகவும் பெறுமதிவாய்ந்த வர்த்தகநாமங்கள் பட்டியலில் 79 ஆவது ஸ்தானத்தைப் பிடித்துள்ளது. Brand Finance வெளியிட்டுள்ள உலகின் மிகவும் பெறுமதிவாய்ந்த 500 வர்த்தகநாமங்களின் பட்டியலில் 25 ஆவது ஸ்தானத்தையும் பிடித்துள்ளது. 2018 ஆம் ஆண்டிற்கான Interbrand மிகச் சிறந்த சர்வதேச வர்த்தகநாமங்கள் பட்டியலில் இது 68 ஆவது இடத்தைப் பிடித்துள்ளதுடன், Fortune 500 தரப்படுத்தல் பட்டியலில் 72 ஆவது ஸ்தானத்தைப் பிடித்துள்ளது.

No comments